அறிமுகம்
நிதிக் கணக்கீட்டுத் தகவல், கிரயக் கணக்கீட்டுத் தகவல், முகாமைக் கணக்கீட்டுத் தகவல் என மூன்று வகையாக கணக்கீட்டுத் தகவல்கள் பாகுபடுத்தப்படுகின்றன. இவற்றுள் கிரயக் கணக்கீடானது முகாமைக்கு தகவல்களை வழங்குவதற்கான ஒரு தகவல் முறையாக காணப்படுகிறது.
கிரயக் கணக்கீடு பற்றி அறிவதற்கு அடிப்படையாக அமைவது நாம் பயன்படுத்தும் பொருட்கள் சேவைகளின் பெறுமதியாகும். உதாரணமாக தளபாட உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் பலகை, வேலை செய்யும் தொழிலாளர்கள், இயந்திரச் செலவு என பல செலவுகளையும் சேர்த்தால் பெறப்படும் பெறுமதியே.
“கிரயம் என்பது பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட வளங்களின் பணப் பெறுமதி என்று பொதுவாக வரைவிலக்கணம் செய்யப்படுகிறது”.
கிரயக் கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள்,சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல்,பதிவு செய்தல்,அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும்.
- இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.
- கிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
- கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.